நேரு விளையாட்டு மைதானத்தில் வீரர்கள் பயிற்சி பெற அனுமதி


நேரு விளையாட்டு மைதானத்தில் வீரர்கள் பயிற்சி பெற அனுமதி
x
தினத்தந்தி 12 Sept 2021 10:58 PM IST (Updated: 12 Sept 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

நேரு விளையாட்டு மைதானத்தில் வீரர்கள் பயிற்சி பெற அனுமதி

கோவை

கொரோனா  காரணமாக கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. இதனால் விளையாட்டு வீரர்கள் அங்குள்ள மாநகராட்சி மைதானத் தில் கடந்த சில மாதங்களாக பயிற்சி மேற்கொண்டனர்.

 அது மண் தரை என்பதால் வீரர்கள் சரியாக பயிற்சி எடுக்க முடியாமல் அவதிப் பட்டனர். இந்த நிலையில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் மட்டும் கோவை நேரு விளை யாட்டு மைதானத் தில் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து பயிற்சியாளர்கள் கூறுகையில், தமிழகத்தில் தடகள போட்டிகளில் தான் வீரர்கள் அதிக பதக்கம் பெறுகின்றனர். ஆனால் கொரோனா காரணமாக விளையாட்டு மைதானங்கள் மூடிக்கிடப் பதால் வீரர்கள் போதிய பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டது. 

பயிற்சி இல்லாமல் போட்டிகளில் வெற்றி பெறுவதும் கடினம். தற்போது நேரு விளையாட்டு மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.

மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிசந்திரன் கூறும்போது, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் மட்டும் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பிறகே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர் என்றார்.


Next Story