தற்கொலை
வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பேரையூர்,
பேரையூர் அருகே உள்ள அத்திபட்டியை சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம் (வயது 20). இவர் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு குடும்பத்தினரிடம் கேட்டுள்ளார். அதற்கு குடும்பத்தினர் இன்னும் இரண்டு ஆண்டுகள் போகட்டும், வேலைக்கு சென்ற பின்பு திருமணம் முடிப்போம் என்று கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த சுந்தரமகாலிங்கம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், சுந்தரமகாலிங்கம் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story