விபத்து


விபத்து
x
தினத்தந்தி 13 Sept 2021 1:11 AM IST (Updated: 13 Sept 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

லாரி மோதி மீன் வியாபாரி பலியானார்.

அலங்காநல்லூர்,
பாலமேடு அருகே உள்ள சின்ன பாலமேட்டை சேர்ந்தவர் காஞ்சி வனம் (வயது 20). மீன் வியாபாரி. நேற்று, இவர் தனது உறவினர் சுகமதியை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு சின்னபாலமேட்டில் இருந்து பாலமேடு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பாலமேட்டில் இருந்து அலங்காநல்லூர் நோக்கி எம்.சாண்ட் ஏற்றிவந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே காஞ்சி வனம் இறந்துவிட்டார். சுகமதி காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து பாலமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  


Next Story