மாவட்ட செய்திகள்

மாணவர்கள் தற்கொலையை தடுக்க ‘நீட்’ மசோதாவுக்கு விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும் + "||" + The ‘Need’ bill to prevent student suicide needs to be approved by the President soon

மாணவர்கள் தற்கொலையை தடுக்க ‘நீட்’ மசோதாவுக்கு விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும்

மாணவர்கள் தற்கொலையை தடுக்க ‘நீட்’ மசோதாவுக்கு விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும்
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டசபையில் இன்று நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவுக்கு விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,

‘நீட்’ தேர்வு நடக்கும் நேரத்தில் சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ், ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற முடியாதோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.


தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வுக்கு முந்தைய நாட்கள் தற்கொலை காலமாக மாறி வருகிறது. கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வுக்கு முந்தைய நாளில் 3 மாணவ, மாணவியர் தற்கொலை செய்துகொண்டனர். ‘நீட்’ தேர்வை வலுக்கட்டாயமாக திணித்தவர்கள்தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். ‘நீட்’ தேர்வால் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும்போது, அது குறித்து மத்திய- மாநில அரசுகள் ஆய்வு செய்து தீர்வு காண முன்வர வேண்டும். ஆனால் தீர்வு காணவேண்டிய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது மிகவும் கவலை அளிக்கிறது.

ஜனாதிபதிக்கு...

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த அ.தி.மு.க. அரசு சட்டசபையில் நிறைவேற்றிய சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தால் இத்தகைய தற்கொலைகள் நிகழ்ந்திருக்காது.

தற்போது ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் புதியசட்டம் தமிழக சட்டசபையில் நாளை (இன்று) தாக்கல் செய்யப்படுகிறது. இதனை உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதலை பெற வேண்டும். அதற்கு அனைத்து வழிகளிலும் பா.ம.க. ஒத்துழைப்பு வழங்கும்.

தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுசின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் ஜனாதிபதி உத்தரவு
தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவியை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
2. மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம்
மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3. ஜனாதிபதி வருகை எதிரொலி: தலைமைச்செயலக ஊழியர்கள் முன்கூட்டியே செல்லலாம்
ஜனாதிபதி வருகை எதிரொலி: தலைமைச்செயலக ஊழியர்கள் முன்கூட்டியே செல்லலாம் தலைமைச்செயலாளர் உத்தரவு.
4. பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்; ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன.
5. ஜனாதிபதி, கவர்னரை உருவாக்கிய பல்கலைக்கழகத்தை விமர்சிப்பதா?
ஜனாதிபதி, கவர்னரை உருவாக்கிய வரலாற்று சிறப்புமிக்க பல்கலைக்கழகத்தை விமர்சிப்பதா? என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.