கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தங்க, வைர நகைகளுடன் பயணி தவறவிட்ட சூட்கேஸ்


கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தங்க, வைர நகைகளுடன் பயணி தவறவிட்ட சூட்கேஸ்
x
தினத்தந்தி 13 Sept 2021 4:40 PM IST (Updated: 13 Sept 2021 4:40 PM IST)
t-max-icont-min-icon

கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தங்க, வைர நகைகளுடன் பயணி தவறவிட்ட சூட்கேஸ் ரெயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

பெரம்பூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 59). இவருடைய மகள் சரண்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ராணிப்பேட்டையில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்காக திருப்பூரில் இருந்து கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட்பாடிக்கு குடும்பத்துடன் வந்தபோது, ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் மற்றும் துணிகள் இருந்த சூட்கேசை ரெயிலில் தவறவிட்டனர்.இதுபற்றி காட்பாடி ரெயில்வே போலீசில் புகார் அளித்தனர். அவர்கள், சென்னை பெரம்பூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி பெரம்பூர் ரெயில் நிலையம் வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆனந்தகுமார் பயணம் செய்த பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பெட்டியை பத்திரமாக மீட்டு சென்னை வந்த ஆனந்தகுமாரிடம் ஒப்படைத்தனர்.

Next Story