கோவையில் பா ஜனதா கவுன்சிலர்கள் தர்ணா
மாவட்ட ஊராட்சி கூட்டரங்கில் மோடி புகைப்படத்தை வைக்கக்கோரி பா.ஜனதா கவுன்சிலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை
மாவட்ட ஊராட்சி கூட்டரங்கில் மோடி புகைப்படத்தை வைக்கக்கோரி பா.ஜனதா கவுன்சிலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மோடி புகைப்படம்
கோவை கலெக்டர் அலுவலக பழைய கட்டிடத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஊராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ஜனதா கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் கேபால்சாமி மற்றும் சங்கீதா ஆகியோர் வந்தனர்.
அப்போது அவர்கள் தங்களது கைகளில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை எடுத்து வந்தனர்.
பின்னர் கூட்ட அரங்கில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு அங்கிருந்தவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
தர்ணா
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக பா.ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் மற்றும் கலெக்டர் அலுவலக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் மற்றும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் கூறும்போது, மாவட்ட ஊராட்சிக்கு மத்திய அரசும், மாநில அரசும் நிதி வழங்கு கிறது. எனவே பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story