சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு


சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 14 Sept 2021 12:55 AM IST (Updated: 14 Sept 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு போலீசார் சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு  போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா விதிமுறைகளின்படி ஆட்டோக்களில் பயணிகளை ஏற்ற வேண்டும், ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயமாக முககவசம் அணிய செய்ய வேண்டும், 

மேலும் ஆட்டோ ஓட்டுனர்கள் சாலை விதிமுறைகளை பின்பற்றிஇயக்க வேண்டும், நிர்ணயித்த இடத்தில் மட்டுமே ஆட்டோக்களை நிறுத்தவேண்டும், மேலும் இன்சூரன்ஸ், ஆர்.சி.புக், ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும்,  ஆட்டோ ஓட்டுனர்கள் கண்டிப்பாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்றார்.

Next Story