அரசு கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம்


அரசு கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம்
x
தினத்தந்தி 14 Sept 2021 12:55 AM IST (Updated: 14 Sept 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

அரசு கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம்

பொள்ளாச்சி

கொரோனா பரவல் காரணமாக பொள்ளாச்சி அரசு கலை கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இதை தொடர்ந்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

 பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள அரசு கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்.சி. கணிதம், பி.பி.ஏ., பி.காம். சி.ஏ., பி.காம். பி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டிற்கு ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் 60 பேர் வீதம் 300 மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். 

இதில் பி.எஸ்சி. கணிதம், பி.ஏ. ஆங்கிலம் தவிர மற்ற அனைத்து பாடப்பிரிவுகளும் நிரப்பப்பட்டு உள்ளன. இந்த நிலையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப கல்லூரிகளில் விண்ணப்பங்களை வினியோகம் செய்வதற்கு அரசு உத்தரவிட்டது. 

இதை தொடர்ந்து கல்லூரியில் நேற்று விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டது. முதல் நாளில் 18 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராஜ்குமார் கூறுகையில், பொள்ளாச்சி அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் பாடப்பிரிவில் காலியாக உள்ள 13 இடங்களுக்கும், பி.ஏ. ஆங்கிலம் பாடப்பிரிவில் பி.சி. (முஸ்லிம்), எம்.பி.சி. (வன்னியர்), எம்.பி.சி., எஸ்.டி. என 4 இடங்கள் காலியாக உள்ளன. 

 விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை கல்லூரி அலுவலகத்தில் நேரடியாக பெற்று, பூர்த்தி செய்து, உரிய சான்றிதழுடன் வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

 இந்த விண்ணப்பதாரர்களுக்கு 20-ந்தேதி கலந்தாய்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றார். 

Next Story