தொழில் அதிபர் வீட்டில் 38 பவுன் நகை கொள்ளை


தொழில் அதிபர் வீட்டில் 38 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 14 Sept 2021 1:11 AM IST (Updated: 14 Sept 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் ரூ.3 லட்சம், 38 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை,

மதுரையில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் ரூ.3 லட்சம், 38 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டிராவல்ஸ் அதிபர் வீடு

மதுரை சூர்யாநகர், பொன்விழா நகர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 60). இவர் டிராவல்ஸ் நிறுவனம் வைத்துள்ளார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு மனைவி, மகனுடன் ராமேசுவரத்திற்கு சென்றார். அங்கு 2 நாட்கள் தங்கி விட்டு நேற்று முன்தினம் மதுரை வந்தார். அப்போது அவர் வீட்டிற்குள் செல்ல முயன்ற போது முன்கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் இது குறித்து திருப்பாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 38 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம்கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

38 பவுன் நகை, பணம் கொள்ளை

அதை தொடர்ந்து திருப்பாலை இன்ஸ்பெக்டர் எஸ்தர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து வீட்டில் பதிவான கைரேகைகளை சேகரித்தனர். அது தவிர போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு அந்த தெரு முனை வரை ஓடிச்சென்று நின்று விட்டது.
இது குறித்து ரவீந்திரன் போலீசாரிடம் கூறும் போது, எனது மகள் திருமணம் முடிந்து வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவரது 38 பவுன் நகைகள், 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை தான் வீட்டில் வாங்கி வைத்திருந்தேன். ராமேசுவரம் சென்ற நிலையில் பூட்டிய வீட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டதாக தெரிவித்தார். மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story