மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Sept 2021 1:22 AM IST (Updated: 14 Sept 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் பஸ்நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் பஸ்நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் ஆசாத் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் முத்துசாமி, ஜானகி, பாலாஜி, நகர்க்குழு உறுப்பினர் அரபுமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யக்கோரி வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

Next Story