மாவட்ட செய்திகள்

மதுரையில் கொரோனாவுக்கு 2 பேர் சாவு + "||" + Corona

மதுரையில் கொரோனாவுக்கு 2 பேர் சாவு

மதுரையில் கொரோனாவுக்கு 2 பேர் சாவு
மதுரையில் கொரோனாவுக்கு 2 பேர் இறந்தனர்.
மதுரை,

மதுரையில் நேற்று 5,236 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 19 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 11 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 74 ஆயிரத்து 201 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 15 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 10 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 72 ஆயிரத்து 872 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 168 ஆக குறைந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பால் நேற்று மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 86 வயது முதியவர், 66 வயது மூதாட்டி ஆகியோர் உயிரிழந்தனர். இதன் மூலம், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,161 ஆக உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. மேலும் 9 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
2. பெண்ணுக்கு 2 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திய நர்சு
பெண்ணாடத்தில் பணியின்போது சக ஊழியரிடம் பேசியபடி ஒரு பெண்ணுக்கு 2 முறை கொரோனா தடுப்பூசியை நர்சு செலுத்தினார். இதை கண்டித்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. கரூரில் 23 பேருக்கு கொரோனா
கரூரில் 23 பேருக்கு கொரோனா
4. 16 பேருக்கு கொரோனா
16 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 113 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 113 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.