பட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளர் கைது


பட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 14 Sept 2021 1:54 AM IST (Updated: 14 Sept 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

டி.கல்லுப்பட்டி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

பேரையூர்,

 டி.கல்லுப்பட்டி அருகே செங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 பேர் உடல் கருகி பலியானார்கள். இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளர் ஆமத்தூரை சேர்ந்த அழகர்சாமி (வயது 42) என்பவர் மீது டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அழகர்சாமியை டி.கல்லுப்பட்டி போலீசார், விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரில் கைது செய்தனர்.

Next Story