கிணற்றில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி


கிணற்றில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 14 Sept 2021 2:24 PM IST (Updated: 14 Sept 2021 2:24 PM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி.

திரு.வி.க. நகர்,

சென்னை கொரட்டூர், சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி (30). இவர்களுக்கு 2 வயதில் நித்திஸ்வரன் என்ற மகன் இருந்தான்.

நேற்று நித்திஸ்வரன் வீட்டின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்தான். அங்கு தரைமட்ட கிணறு உள்ளது. அதன்மேல் பகுதியில் பிளாஸ்டிக் சீட் போட்டு மூடி இருந்தனர். அங்கு விளையாடிக்கொண்டிருந்த நித்திஸ்வரன், எதிர்பாராதவிதமாக தரைமட்ட கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றுக்குள் குதித்து குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே நித்திஸ்வரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து கொரட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story