மாவட்ட செய்திகள்

போலீஸ்காரர் வீட்டில் 70 ஆயிரம் திருட்டு + "||" + 70 thousand theft at the house of a policeman

போலீஸ்காரர் வீட்டில் 70 ஆயிரம் திருட்டு

போலீஸ்காரர் வீட்டில் 70 ஆயிரம் திருட்டு
போலீஸ்காரர் வீட்டில் 70 ஆயிரம் திருட்டு
கோவை

காவலர் பயிற்சி பள்ளி வளாக குடியிருப்பில் போலீஸ்காரர் வீட்டில் ரூ.70 ஆயிரம் திருட்டு போனது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது

போலீஸ்காரர்

கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள அடுக்குமாடி வீட்டில் 3 -வது தளத்தில் லெனின் பீட்டர் (வயது 35) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

இவர் கோவை மாநகர ஆயுதப்படையில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

மனைவி தனது மகனை அழைத்துக் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். லெனின் பீட்டர், நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார்.

ரூ.70 ஆயிரம் திருட்டு

அவர், நேற்று காலை வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.70 ஆயிரத்தை காணவில்லை. மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. 

இது குறித்து அவர், ரேஸ்கோர்ஸ் போலீசார் நிலையத்தில் புகார் அளித்தார். அவர், முதலில் ரூ. 70 ஆயிரம் மற்றும் 20 பவுன் நகை கொள்ளை போனது என்று கூறியுள்ளார். 

உடனே போலீசார் அவருடைய வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் கட்டிலுக்கு அடியில் 26 பவுன் நகை இருந்தது தெரியவந்தது. ரூ.70 ஆயிரம் மட்டும் திருட்டு போனது தெரியவந்தது.

மோப்பநாய் சுற்றி வந்தது

இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப் பட்டது. அது காவலர் பயிற்சி பள்ளி வளாகத்துக்குள்ளேயே சுற்றி வந்தது. 

ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்க வில்லை. தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து, போலீஸ் காரர் வீட்டில் பூட் டை உடைத்து நகை திருடியது யார்?. வெளியாட் கள் யாரும் உள்ளே போக முடியாத நிலையில், இதில் தொடர்புடைய வர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பான பகுதி

போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்துக்குள் வெளிநபர்கள் யாரும் செல்ல முடியாதபடி இரவும் பகலும் பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். 

அவர்கள் உரிய விசாரணைக்கு பிறகே வெளியாட்களை உள்ளே செல்ல அனுமதிப்பார்கள். இவ்வளவு பாதுகாப்பு மிகுந்த பகுதியில் மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டி உள்ளனர்.

கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 

இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே குற்றசம்பவங்களை தடுக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.