வருவாய் ஊழியர்கள் தர்ணா போராட்டம்


வருவாய் ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 14 Sept 2021 7:40 PM IST (Updated: 14 Sept 2021 7:40 PM IST)
t-max-icont-min-icon

வருவாய் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

கோவை

ஜூனியர் வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி உயர்வு குறித்த முதற் கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன. 

இதில் சில குளறு படி நடப்பதால் ஒருசில ஊழியர்களின் பதவி உயர்வு பாதிக்கும் அபாயம் உள்ளதாக கூறி வருவாய் துறை ஊழியர்கள் நேற்று காலை கோவை தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

 பின்னர் அவர்கள் திடீரென்று அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன. 

உடனே அவர்களிடம், தெற்கு ஆர்.டி.ஓ. மற்றும் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் ஊழியர்கள் கலைந்து சென்றனர்.


Next Story