ஆக்கிரமிப்பில் இருந்த 10 கோடி நிலம் மீட்பு


ஆக்கிரமிப்பில் இருந்த 10 கோடி நிலம் மீட்பு
x
தினத்தந்தி 14 Sept 2021 7:52 PM IST (Updated: 14 Sept 2021 7:52 PM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்பில் இருந்த 10 கோடி நிலம் மீட்பு

கோவை

காளப்பட்டியில் குடிசைகள் அமைத்து ஆக்கிரமித்து இருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மீட்டனர்.

சமுதாய கூடம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 35-வது வார்டு காளப்பட்டி அருகே பெரியார் நகரில் மாநகராட்சி சார்பில் சமுதாய கூடம் கட்ட 66 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் அந்த இடத்தை 10 பேருக்கு போலி வரைபடம் மூலம் அனுமதி வழங்கி, வீட்டு மனைகளாக கிரையம் செய்யப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது. 

காளப்பட்டி பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதற்கு முன்பு அந்த இடம் வீட்டுமனைகளாக இருந்ததாக ஆவணத்தில் காண்பிக்கப் பட்டு இருந்தது. 

இது குறித்த புகாரின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

இதையடுத்து கோவை கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அதிகாரி புவனேஸ்வரி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆவ ணங்களை வைத்து ஆய்வு செய்தனர். 

இதில் அந்த இடம் ஆக்கிரமிப் பில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த இடத்தை சுற்றி ஆக்கிரமித்து போடப்பட்டு இருந்த கம்பி வேலிகள் மற்றும் குடிசைகளை அதிகாரிகள் அகற்றினர்.

 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்தவர்கள் அதிகாரிகளுடன் வாக் குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

உடனே எதிர்ப்பு தெரிவித்தவர்களை, போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து ஆக்கிரமிப்பில் இருந்த இடம் மீட்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

அறிவிப்பு பலகை

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது

காளப்பட்டி பேரூராட்சியாக இருந்த போது அந்த இடம் போலி வரைபடம் மூலம் வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு கிரையம் செய்யப்பட்டதாக ஆவணங்களை காட்டி இடத்தை ஆக்கிரமிக்க முயன்று உள்ளனர்.

 ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த 8 குடிசைகள் அகற்றப்பட்டன. 
அங்கு மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. 

அந்த இடம் மொத்தம் 66 சென்ட் ஆகும். அதன் இன்றைய மதிப்பு ரூ.10 கோடி. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் அங்கு திட்டமிட்டபடி மாநகராட்சி சார்பில் சமுதாய கூடம் கட்டப்படும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story