குடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்


குடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 14 Sept 2021 11:00 PM IST (Updated: 14 Sept 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்த அட்டகாசம் செய்த காட்டு யானைகள் தொழிலாளியின் வீட்டை உடைத்து சேதப்படுத்தின.

வால்பாறை

வால்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்த அட்டகாசம் செய்த காட்டு யானைகள் தொழிலாளியின் வீட்டை உடைத்து சேதப்படுத்தின. 

காட்டு யானைகள் புகுந்தன

வால்பாறையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானை கள், அருகில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்து அவ்வப்போது அட்டகாசம் செய்து வருகிறது. இதைத்தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் வால்பாறை முடீஸ் அருகே உள்ள வனப்பகுதி யில் இருந்து 3 காட்டு யானைகள் வெளியே வந்தன. பின்னர் அவைகள் முத்துமுடி எஸ்டேட் 2-வது பிரிவு பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்தது. 

வீட்டை உடைத்தது 

அங்குள்ள லீலா என்வர் வீட்டின் முன்பக்க அறை சுவற்றை உடைத்து துதிக்கையை உள்ளே விட்டு சாப்பிட உணவு கிடைக்குமா என தேடியது. ஆனால் வீட்டில் யாரும் இல்லாத தால் உணவு பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. 

இதனால் கோபம் அடைந்த யானைகள் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை தூக்கி வெளியே வீசி சேதப்படுத்தியது. பின்னர் அங்கிருந்து மற்றொரு வீட்டை நோக்கி சென்றது. 

பொதுமக்கள் விரட்டினர் 

இந்த நிலையில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தபோது அங்கு 3 காட்டு யானைகள் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது செல்போன் சிக்னல் கிடைக்காததால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை.

இதையடுத்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து தங்கள் வீடுகளில் உள்ள மொட்டைமாடிகள் மீது ஏறி நின்று கூச்சலிட்டும், பாத்திரங்கள் மூலம் சத்தம் எழுப்பியும் அந்த யானைகளை துரத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். 

கோரிக்கை 

இருந்தபோதிலும் ஒரு மணிநேரம் அங்கு சுற்றி வந்த காட்டு யானைகள் அதிகாலை 2.30 மணியளவில் வனப்பகுதிக்குள் சென்றன. தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு இருப்பதால் மீண்டும் குடியிருப்புக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. 

எனவே வனத்துறையினர் இங்கு முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்டேட் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story