மாவட்ட செய்திகள்

10 ம் வகுப்பு மாணவி பலாத்காரம் + "||" + 10th grade student rape

10 ம் வகுப்பு மாணவி பலாத்காரம்

10 ம் வகுப்பு மாணவி பலாத்காரம்
திருமண ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
பொள்ளாச்சி

திருமண ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். 

பள்ளி மாணவி

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி முதல் அந்த சிறுமியை காணவில்லை. 

இதையடுத்து பெற்றோர் அந்த சிறுமியை அக்கம், பக்கத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து சிறுமியின் பெற்றோர் வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

ஆசைவார்த்தை கூறி கடத்தல் 

அதன்பேரில் போலீசார் சிறுமியை காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அந்த சிறுமிக்கும், உடுமலையை சேர்ந்த பூபதி (26) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்தது.

எனவே அவர் திருமண ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரின் செல்போன் எண்ணை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர். 

போக்சோவில் கைது 

பின்னர் போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்தனர். அந்த சிறுமியை பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மாணவி பாலியல் பலாத்காரம்
பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
2. மாணவி பலாத்காரம்; தொழிலாளி கைது
மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.