மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சியில் சூறாவளி காற்றுடன் கனமழை + "||" + Heavy rain with hurricane force winds in Pollachi

பொள்ளாச்சியில் சூறாவளி காற்றுடன் கனமழை

பொள்ளாச்சியில் சூறாவளி காற்றுடன் கனமழை
பொள்ளாச்சியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் பில் சின்னாம்பாளையத்தில் சாலையில் மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் பில் சின்னாம்பாளையத்தில் சாலையில் மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மரம் விழுந்தது

பொள்ளாச்சி பகுதியில் கடந்த 2 மாதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை கொட்டி தீர்க்கிறது. இந்த நிலையில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. 

மழைக்கு இடையே வீசிய காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பில் சின்னாம்பாளையத்தில் சாலையோரத்தில் நின்ற மரம் முறிந்து விழுந்தது. இதன் காரணமாக வால்பாறை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கோட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு 

அதுபோன்று நெடுஞ்சாலைத்துறையினரும் அங்கு வந்து சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றினார்கள். இதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

 பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 384 கன அடி நீர்வந்தது. அணையில் இருந்து மதகுகள் வழியாக உபரிநீரும், தூணக்கடவு அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 6ள50 கன அடியும் திறந்து விடப்பட்டது. இதே போன்று ஆழியாறு அணைக்கு வினாடிக்கு 1,022 கன அடி நீர் வந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 535 கன அடியும் திறக்கப்பட்டது.

மழையளவு 

பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் பெய்த மழையளவு (மில்லிமீட்டர்) விவரம் வருமாறு:-

சோலையார் 23 மி.மீ., பரம்பிக்குளம் 6, ஆழியாறு 1.6, வால்பாறை 24, மேல்நீராறு 41, கீழ்நீராறு 22, காடம்பாறை 8, சர்க்கார்பதி 3., வேட்டைக் காரன்புதூர் 6, மணக்கடவு 13, தூணக்கடவு 3,, பெருவாரிபள்ளம் 8, அப்பர் ஆழியாறு 2, நவமலை 1, பொள்ளாச்சி 15.4 மி.மீ.

தொடர்புடைய செய்திகள்

1. தேன்கனிக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் கனமழை சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
தேன்கனிக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.