மாவட்ட செய்திகள்

வாணியம்பாடியில் நடந்த கொலை, கஞ்சா வழக்குகளை விசாரிக்க இன்ஸ்பெக்டர் நியமனம் + "||" + Appointment of Inspector to investigate murder and cannabis cases

வாணியம்பாடியில் நடந்த கொலை, கஞ்சா வழக்குகளை விசாரிக்க இன்ஸ்பெக்டர் நியமனம்

வாணியம்பாடியில் நடந்த கொலை, கஞ்சா வழக்குகளை விசாரிக்க இன்ஸ்பெக்டர் நியமனம்
வாணியம்பாடியில் நடந்த முன்னாள் கவுன்சிலர் கொலை மற்றும் கஞ்சா வழக்குகளை விசாரிக்க இன்ஸ்பெக்டர் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வாணியம்பாடி

வாணியம்பாடியில் நடந்த முன்னாள் கவுன்சிலர்  கொலை மற்றும் கஞ்சா வழக்குகளை விசாரிக்க  இன்ஸ்பெக்டர் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் கவுன்சிலர் கொலை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கடந்த மாதம் (ஜூலை) 26-ந்் தேதி டீல் இம்தியாஸ் என்பவருக்கு சொந்தமான குடோனில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குடோனில் கஞ்சா, பட்டாக்கத்திகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்குகள் காரணமாக வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இன்ஸ்பெக்டர் நியமனம்

அதைத்தொடர்ந்து வசீம் அக்ரம் கொலை வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகளை விசாரிக்க வாணியம்பாடி தாலுகா இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த நாகராஜம் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை வாணியம்பாடி டவுன் இன்ஸ்பெக்டராகவும் நியமித்து வேலூர் சரக டி.ஐ.ஜி.பாபு உத்தரவிட்டுள்ளார்.

இன்ஸ்பெக்டர் நாகராஜனுக்கு பதில் வாணியம்பாடி தாலுகா இன்ஸ்பெக்டராக திருப்பத்தூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பழனிமுத்து நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாயமான பெண் வனப்பகுதியில் பிணமாக கிடந்தார்
மாயமான பெண் வனப்பகுதியில் பிணமாக கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2. பா.ஜனதா பிரமுகர் படுகொலை
தேவகோட்டை அருகே பா.ஜனதா பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்.
3. 90 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்ற பேரன்
பெரம்பலூர் அருகே 90 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்த பேரன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. விவசாயி கத்தியால் குத்திக்கொலை மேல்மலையனூர் அருகே பரபரப்பு
மேல்மலையனூர் அருகே விவசாயி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
5. ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை
கள்ளக்குறிச்சியில் ஆசைக்கு இணங்க மறுத்ததால் வடமாநில பெண் கத்தியால் குத்தி கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.