அரசு பஸ் மோதி பெண் பலி


அரசு பஸ் மோதி பெண் பலி
x
தினத்தந்தி 15 Sept 2021 2:26 AM IST (Updated: 15 Sept 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் மோதி பெண் பலியானார்

மதுரை,
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு அரசு பஸ் ஒன்று இரவு 10 மணிக்கு பணிமனைக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் கட்டபொம்மன் சிலை அருகே சென்றபோது அந்த வழியாக சாலையைக் கடக்க வந்த  பெண் மீது  மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த பெண் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண் மதுரை விளாங்குடி யூனியன் பேங்க் காலனியை சேர்ந்த மணி கண்டன் என்பவரது மனைவி இந்திரா (வயது44) என்பது தெரியவந்தது. பழக்கடையில் வேலை பார்த்து வந்த இவர் பணிமுடிந்து வீட்டுக்கு சென்றபோது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கரிமேடு போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story