மாவட்ட செய்திகள்

நகையை திருடிய பெண் கைது + "||" + theft

நகையை திருடிய பெண் கைது

நகையை திருடிய பெண் கைது
10 பவுன் நகையை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
வாடிப்பட்டி, 
வாடிப்பட்டி அருகே தனிச்சியம் அய்யனகவுன்டன்பட்டி தெற்குதெருவை சேர்ந்தவர் செந்தாமரை மகன் காசி (வயது32). கிரஷர்தொழிலாளி. இவர் கடந்த 4-ந்தேதி குடும்பத்துடன் சென்னை சென்றார். அதன்பின் வீட்டிற்கு வந்து பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.  இது சம்பந்தமாக காசி கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தார். அதில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் தினமணி மனைவி ஜெயசித்ரா (42) என்பவர் திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடம் இருந்து 6 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.