மாவட்ட செய்திகள்

2 வாலிபர்கள் சிக்கினர் + "||" + arrest

2 வாலிபர்கள் சிக்கினர்

2 வாலிபர்கள் சிக்கினர்
மோசடியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் சிக்கினர்.
திருமங்கலம், 
திருமங்கலம் செங்குளத்தை சேர்ந்த பெரியகருப்பன் மனைவி ராமுத்தாய் (வயது 50). கூலித்தொழிலாளி. இவரது மகன் பாண்டி (35). கண் பார்வையற்றவர். எம்.ஏ.பிஎட்., படித் துள்ளார். பாண்டிக்கு நூலகத்தில் பணி வாங்கித் தருவதாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரை சேர்ந்த கார்த்திக் (38), அவருடைய நண்பர் மறவன்குளம் காளிமுத்து நகரை சேர்ந்த சரவணகுமார் (33) ஆகியோர் ஆசை வார்த்தை கூறி ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்திவந்தனர். இதேபோல் திருமங்கலம் பாண்டியன் நகர் சின்ன வட கரையை சேர்ந்தவர் தேவி (வயது 60) என்பவரிடம் கடந்த 1-ந்தேதி  கார்த்தி மற்றும் சரவண குமார் ஏ.டி.எம். கார்டு, தங்க தோடுகளை பெற்று தப்பி ஓடிவிட்டனர். போலீசார் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா தடயங்கள் மூலம் 2 பேரையும் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று திருமங்கலத்தில் தனியார் விடுதியில் 2 பேரும் இருப்பது தெரியவரவே டவுன் போலீசார் சென்று வாலிபர்கள் கார்த்தி அவரது நண்பர் சரவணகுமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை