கந்துவட்டி சட்டத்தின்கீழ் 3 பேர் மீது வழக்கு
கந்துவட்டி சட்டத்தின்கீழ் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை,
மதுரை காமராஜர்புரம் இந்திரா நகரை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி வில்லம்மாள் (வயது 42), கீழவெளி வீதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஊழியர். இவர் அதே ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் சத்யா, முனியசாமி, சிவா ஆகியோரிடம் ரூ.80 ஆயிரம் கடன் வாங்கினார். அதற்காக அவர் மாதம் ரூ.8 ஆயிரம் வட்டி கட்டி வந்தார். கொரோனா காலத்தில் அவரால் வட்டி கட்ட முடியவில்லை. இதனால் அவரை கடன் கொடுத்தவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. அதில் மனவருத்தம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை ஆஸ்பத்திரியில் உள்ளவர்கள் மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையில் வில்லம்மாள் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விளக்குத்தூண் போலீசார் கந்து வட்டி சட்டத்தின் கீழ் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story