கோவை அருகே வாலிபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது


கோவை அருகே வாலிபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 15 Sept 2021 10:45 PM IST (Updated: 15 Sept 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே வாலிபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

பொள்ளாச்சி,

கோவை அருகே உள்ள காரமடையை சேர்ந்தவர் சிவசக்தி (வயது 18). இவர் பச்சை குத்தும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். 

அதன்படி பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒரு கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி சிவசக்தி திருமணம் செய்தது தெரியவந்தது. 

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தந்தை மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அவரையும் கைது செய்தனர்.

Next Story