‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 16 Sept 2021 2:59 AM IST (Updated: 16 Sept 2021 2:59 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள்.

தெருவிளக்கு தேவை 
மதுரை மாவட்டம் கரடிப்பட்டி பஞ்சாயத்து பாரதியார் நகர் 3-வது தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லை. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் பெண்கள் ெவளியில் செல்லவே அச்சம் அடைகின்றனர். மேலும், திருட்டு சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் நலன்கருதி இப்பகுதியில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தப்படுமா? 
பத்மநாபன், நாகமலைபுதுக்கோட்டை. 

போக்குவரத்து நெரிசல் 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரம் கழனிவாசல் முதல் திருச்சி பைபாஸ் வரை சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக கழனிவாசல் அருகிலுள்ள சாலை மிகவும் குறுகலாக போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சிலர் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மகேந்திரா, காரைக்குடி. 

குண்டும், குழியுமான சாலை 
விருதுநகர் மாவட்டம் சுந்தரபாண்டியத்தில் உள்ள சாலைகள் மிகவும் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. மேலும், இந்த சாலையில் செல்லும் போது வாகனங்களும் பழுதாகி விடுகிறது. எனவே, குண்டும், குழியுமான சாலையை சீரமைப்பார்களா?
பொதுமக்கள், சுந்தரபாண்டியம். 

பூட்டி கிடக்கும் நூலகம் 
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கிளை நூலகம் உள்ளது. ஆனால் இந்த கிளை நூலகம் வேலை நேரத்திலும் பூட்டியே கிடக்கின்றது. இதன் காரணமாக இப்பகுதியை சேர்ந்த புத்தக வாசிப்பாளர்களும், தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த நூலகத்தை தினசரி திறக்க நடவடிக்கை எடுப்பார்களா?
ரமேஷ், கீழக்கரை.

திறந்த வெளி கிணறு 
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ஏரியூர் செல்லும் வழியில் சாலையோரத்தில் பெரிய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு திறந்த நிலையில் இருக்கிறது. இந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகளும், சிறுவர், சிறுமிகளும் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே, ஆபத்தான திறந்த வெளி கிணற்றை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ராஜேந்திரன், வடவன்பட்டி. 

சேதமடைந்த சாக்கடை கால்வாய் பாலம் 
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சியில் சாக்கடை கால்வாய் பாலம் கடந்த 2 மாதங்களாக சேதம் அடைந்துள்ளது. இதனால் இந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் முதியவர்களும், குழந்தைகளும் தவறி சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து விடுகின்றனர். உடனடியாக இப்பகுதியில் உடைந்த சாக்கடை பாலத்தை சரிசெய்ய வேண்டும்.
பிரபாகரன், அலங்காநல்லூர். 

பஸ் வசதி வேண்டும் 
ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி மாவட்டத்தின் கடைசி எல்லை ஆகும். இங்கிருந்து ராமநாதபுரம், கமுதி, முதுகுளத்தூர், தூத்துக்குடி செல்ல நேரிடையாக பஸ் வசதி இல்லை. இதன் காரணமாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் இருந்து போதிய வசதி செய்து கொடுக்க வேண்டும். 
முனியசாமி, பெருநாழி. 

எரியாத தெருவிளக்கு 
மதுரை எஸ்.பி.ஜி. சர்ச் சந்து பகுதியில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால் இரவு நேரத்தில் பெண்கள் வெளியில் செல்லவே அச்சம் அடைகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா? 
சுப்பிரமணியன், மதுரை. 

குழிகளாக மாறிய சாலை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சக்கரை வாவா தெரு மற்றும் ஓடைத்தெரு போன்ற தெருக்களில் தண்ணீர் குழாய் அமைப்பதற்கு குழிகள் தோண்டப்பட்டது. ஆனால் அதனை சரியாக மூடாததால் சாலையில் கற்கள் அனைத்தும் பரவலாக கிடக்கிறது. இதனால் மக்கள் வாகனம் ஓட்ட மிகவும் சிரமம் அடைகிறார்கள். விபத்துகளும் நடக்கிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகம்மது ஆசிக் ஹக்கீம், சிவகாசி.

குழாய் சீரமைக்கப்படுமா?
மதுரை மாநகராட்சி விரிவாக்க பகுதி சீனிவாசநகர் 9-வது குறுக்கு தெருவில் குடிநீர் செல்லும் குழாய் சேதமாகி உள்ளது. இதுபற்றி பல முறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. இதனால், குடிநீர் வீணாகிறது. மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசு உருவாகி டெங்கு பரவி வருகிறது. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சீனிவாச நகர். 


Next Story