பகலில் கடுமையான வெயிலும், மாலையில் பலத்த மழையும் பெய்தது
மதுரையில் நேற்று பகலில் கடுமையான வெயிலும், மாலையில் பலத்த மழையும் பெய்தது.
மதுரை,
மதுரையில் நேற்று பகலில் கடுமையான வெயிலும், மாலையில் பலத்த மழையும் பெய்தது.
கடும் வெயில்
மதுரையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால், தினமும் 100 டிகிரிக்குமேல் வெயிலின் தாக்கம் இருந்தது. இரவிலும் அதே வெப்பசலனம் காணப்பட்டது.இதனால் மதுரை மக்கள் மழைக்காக ஏங்கி காத்திருந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலையிலும் 103 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி இருந்தது. இருப்பினும் மாலை 4 மணி அளவில் மழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டது. அதன்படி கருமேகங்கள் ஒன்று திரண்டு பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.
1 மணி நேரம் மழை
மாலை 5.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 1½ மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோல் நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
குறிப்பாக பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப் பாளையம், தல்லாகுளம், அண்ணாநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. காலையில் கடுமையான வெயிலில் அவதியடைந்த மக்களுக்கு, மாலையில் பெய்த பலத்த மழை மகிழ்ச்சியையும், குளிர்ச்சியையும் கொடுத்தது.
மரம் முறிந்தது
நேற்று பெய்த கனமழையில் மதுரை டி.வி.எஸ்.நகர் கோவலன் நகர் பகுதியில் மரம் முறிந்து அந்த பகுதியில் இருந்த கார் மீது விழுந்தது. இதுகுறித்து அந்தபகுதி மக்கள் திடீர்நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்து மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் மின்தடையும் ஏற்பட்டது.
Related Tags :
Next Story