மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.65 லட்சம் தங்கம் பறிமுதல் + "||" + 65 lakh gold seized at Chennai airport

சென்னை விமான நிலையத்தில் ரூ.65 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.65 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு கொச்சி மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ரகசிய தகவல் அளித்தனர்.
இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், பயணிகளை தீவிரமாக கண்காணித்தனா். அப்போது துபாயில் இருந்து வந்த பயணிகளை சோதனை செய்தபோது சந்தேகப்படும்படியாக வந்த கேரளாவை சேர்ந்த 28 வயது இளம்பெண்ணை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசினார். இதையடுத்து அவரது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவுமில்லை. பின்னர் பெண் அதிகாரிகள், அந்த இளம்பெண்ணை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனா். அவரிடம் இருந்து ரூ.65 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 340 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை, விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
2. சென்னை விமான நிலையத்தில் கப்பல் கேப்டனிடம் ‘சாட்டிலைட்’ போன் பறிமுதல்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கத்தாருக்கு விமானம் சென்றது. அதில் செல்ல இந்தோனேசியா நாட்டைச்சோ்ந்த டெய்ஸ் சென்டோ (வயது 50) என்பவரது உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
3. சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை கவுண்ட்டர்களில் குவிந்த பயணிகள்
சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து 4 விமானங்களில் வந்த பயணிகள், குடியுரிமை சோதனை கவுண்ட்டர்களில் குவிந்தனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.
4. சென்னை விமான நிலையத்தில் அதிநவீன கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு
வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்காக 30 நிமிடத்தில் முடிவு வரும் அதிநவீன கொரோனா பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
5. சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்காக புதிய கருவிகள் - 30 நிமிடத்தில் முடிவுகள் தெரியும்
சென்னை விமான நிலையத்தில் 30 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை வழங்கும் வகையில் ரேபிட் ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.