தெங்குமரஹடா அரசு பள்ளி சுவரில் தலைவர்களின் படங்களை வரைந்து விழிப்புணர்வு
தெங்குமரஹடா அரசு பள்ளி சுவரில் தலைவர்களின் படங்களை வரைந்து விழிப்புணர்வு
கோத்தகிரி
திருப்பூர் பாண்டியன் நகர் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சந்தோஷ்குமார் தலைமையிலான ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து 'திருப்பூர் பட்டாம்பூச்சிகள் அரசு பள்ளிகளை பாதுகாப்போம்' என்ற தலைப்பில் மலைப் பிரதேசங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை தேர்வு செய்து ஓவிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட ஆதிவாசி பழங்குடியின கிராமமான தெங்குமரஹடா அரசு பள்ளியில் உள்ள சுவர்கள் மற்றும் வகுப்பறைகளில் அழகிய ஓவியங்கள் வரைந்துள்ளனர்.
இந்த ஓவியங்கள் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி, காண்போர் அனைவரையும் பெரிதும் கவர்ந்து வருகிறது. ஓவியம் வரைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த இந்த அமைப்பினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
Related Tags :
Next Story