மனைவியை கொலை செய்தது ஏன்?
மனைவியை கொலை செய்தது ஏன்
துடியலூர்
மனைவியை கொலை செய்தது ஏன்? என்று கைதான டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
ஆட்டோ டிரைவர்
கோவை கவுண்டம்பாளையத்தை அடுத்த வேலாண்டிபாளையம் மஞ்சேஸ்வரி காலனி மகாத்மா காந்தி வீதியை சேர்ந்தவர் ஆனந்த குமார் (வயது 55). ஆட்டோ டிரைவர்.
இவருடைய மனைவி செல்வி (48). இவர்கள் தங்களுக்கு சொந்தமான 5 வீடுகளை வாடகைக்கு விட்டு உள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களின் 5-க்கும் மேற்பட்ட வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
இவர்களுடைய மகள் திருமணம் முடிந்து கணவர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்தகுமாருக்கு குடிப் பழக்கம் இருந்துள்ளது.
இதனால் அவர், மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
வாக்குவாதம்
நேற்று மாலை 5 மணியளவில் வீட்டில் இருக்கும்போது ஆனந்தகுமார் தனது செல்போன் மூலம் வேறு ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது.
இதை அவருடைய மனைவி செல்வி கண்டித்து உள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரம் அடைந்த அவர் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் செல்வியின் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த செல்வி வீட்டில் வெளியே ஓடினார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, ஆனந்தகுமாரை நேற்று கைது செய்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது
ஆனந்தகுமாருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் அவர் அந்த பெண்ணுடன் அடிக்கடி பேசி உள்ளார். இதை அவருடைய மனைவி செல்வி கண்டித்துள்ளார்.
ஆனாலும் அவர் தொடர்ந்து இரவு நேரங்களிலும் செல்போனில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
இது பற்றி கேட்ட போது அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தகுமார், செல்வியை கத்தியால் குத்தி கொலை செய்து உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story