காதலி வீட்டு முன் விஷம் குடித்த வாலிபர் சாவு
காதலி வீட்டு முன் விஷம் குடித்த வாலிபர் சாவு
துடியலூர்
கருத்து வேறுபாடு காரணமாக பேச மறுத்ததால் காதலியின் வீட்டு முன் விஷம் குடித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
காதல் தீவிரம்
கோவையை அடுத்த துடியலூர் பன்னிமடை தாளியூரை சேர்ந்தவர் வேல்ராஜ். இவருடைய மகன் சவுந்தரபாண்டியன் (வயது 27). இவருக் கும், கதிர்நாயக்கன்பாளையத்தை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது.
இதனால் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் சவுந்தரபாண்டியன் சிங்கப்பூருக்கு சென்று வெல்டிங் வேலை பார்த்து வந்தார். அவர், அங்கிருந்தபடியே தனது காதலியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி காதலை வளர்த்து வந்தார்.
பேசுவதை தவிர்த்தார்
இதற்கிடையே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் காதலருடன் பேசுவதை அந்த பெண் தொடர்ந்து தவிர்த் தார்.
இதனால் மனவேதனை அடைந்த சவுந்தரபாண்டியன் சிங்கப்பூரி லேயே தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி உள்ளனர்.
இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சவுந்தரபாண்டியன் கோவை திரும்பி, உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். ஆனாலும் அவர் தனது காதலியை மறக்க முடியாமல் தவித்தார்.
சம்பவத்தன்று அவர், தனது காதலியின் வீட்டுக்கு சென்று வெளியே வருமாறு காதலியை அழைத்தார். ஆனால் அந்த பெண் வெளியே வர மறுத்துவிட்டார்.
விஷம் குடித்து சாவு
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சவுந்தரபாண்டியன் தான் கொண்டு வந்த விஷத்தை காதலி வீட்டின் முன்பு வைத்து குடித்தார். இதன் காரணமாக சிறிது நேரத்தில் அவர் மயங்கினார்.
உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சவுந்தரபாண்டியன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story