தங்கசங்கிலியை பறிக்க விடாமல் போராடிய பெண்
தங்கசங்கிலியை பறிக்க விடாமல் போராடிய பெண்
சரவணம்பட்டி
கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் குமார். டிரைவர். இவரு டைய மனைவி சித்ரா (வயது43). இவர் ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் தனது மகளுடன் விசுவாச புரம் பகுதியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு பஸ்சில் சென்றார். அங்கு பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 பேர் திடீரென்று சித்ராவின் கழுத்தில் கிடந்த தங்கசங்கிலியை பறிக்க முயன்றனர்.
இதை அறிந்த சித்ரா சுதாரித்துக் கொண்டு தங்க சங்கிலியை பறிக்க விடாமல் தடுத்து போராடினார்.
மேலும் அந்த பெண் சத்தம் போட்டார். இதனால் நகை பறிக்க முடியாத ஆத்திரத்தில் மர்ம நபர்கள் சித்ராவை கீழே தள்ளி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த சித்ரா சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story