வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 1,181 பேர் வேட்புமனு தாக்கல்
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று 1,181 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
ராணிப்பேட்டை
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று 1,181 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுதாக்கல்
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று 2-வது நாளாக நடந்தது. 2-வது நாளான நேற்று மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஒருவரும், ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 5 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட 99 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 227 பேரும் என மொத்தம் 332 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களிலும் நேற்று 2-வது நாளாக வேட்புமனுதாக்கல் நடந்தது. 2-வது நாளான நேற்று ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 83 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 235 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 5 பேரும் என மொத்தம் 323 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு யாரும் நேற்று மனுதாக்கல் செய்யவில்லை.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 11 பேரும், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 109 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 350 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். அதன்படி நேற்று ஒரே நாளில் 470 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 2 நாட்களையும் சேர்த்து 526 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
2-வது நாளான நேற்று 3 மாவட்டங்களிலும் மொத்தம் 1,181 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story