மாவட்ட செய்திகள்

17 பேருக்கு கொரோனா + "||" + corona

17 பேருக்கு கொரோனா

17 பேருக்கு கொரோனா
புதிதாக 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மதுரை, செப்.17-
மதுரையில் நேற்று 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 11 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 74 ஆயிரத்து 257 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 15 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 8 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 72 ஆயிரத்து 916 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 179 ஆக குறைந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பால் நேற்று மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1162 ஆக உயர்ந்துள்ளது.
மதுரையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. எனவே பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முககவசம் அணிந்தபடியும், சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் எனவும், தகுதி உள்ள நபர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. 19 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று 19 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
2. நாடு முழுவதும் ஒரு நாளில் 8.36 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டது
கொரோனாவுக்கு எதிராக ஒரு நாளில் 8.36 லட்சம் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டது.
3. மேலும் 2 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. கரூரில் 12 பேருக்கு கொரோனா
கரூரில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. 9 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.