ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருட்டு

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருட்டு
கோவை
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருடிய 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது
மூதாட்டி
கோவை சுண்டாக்காமுத்தூர் ராமசெட்டிபாளையம் சின்னசாமி பண்டார வீதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மனைவி வேலுமணி (வயது 72). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். வேலுமணி தனது மகனுடன் வசித்து வருகிறார்.
அவர் கடந்த 12-ந் தேதி கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத் தில் இருந்து கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறினார்.
அந்த பஸ் லட்சுமி மில்ஸ் சிக்னல் பகுதிக்கு வந்த போது 2 பெண்கள் ஏறினர்.
நகை திருட்டு
பஸ்சில் கூட்டம் குறைவாக இருந்தது. பஸ்சில் ஏறிய 2 பேரில் ஒரு பெண் வேலுமணியின் பின்இருக்கையிலும், மற்றொரு பெண் அருகிலும் வந்து உட்கார்ந்தனர்.
இதில், வேலுமணியின் அருகில் அமர்ந்திருந்த பெண் தனக்கு வாந்தி வருவதால் ஜன்னலை திறக்க வேண்டும் என்று கூறி நடித்து உள்ளார். அதை உண்மை என நம்பிய வேலுமணி சற்று ஒதுங்கினார்.
அப்போது அந்த 2 பெண்களும் சேர்ந்து ஜன்னலை திறப்பது போல் நடித்து வேலுமணி கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை நைசாக திருடினர்.
வலைவீச்சு
பின்னர் அந்த 2 பேரும் ஹோப் காலேஜ் பஸ் நிறுத்தத்தில் இறங்கி சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து வேலுமணி பார்த்த போது கழுத்தில் கிடந்த தங்கசங்கிலி திருடப்பட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தனது மகன் உதவியுடன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை திருடிய 2 பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் அந்த பெண்கள் இறங்கிய ஹோப் காலேஜ் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story






