தந்தை, மகனை மிரட்டி நகை, பணம் கொள்ளையடித்த 2 பேர் கைது


தந்தை, மகனை மிரட்டி நகை, பணம் கொள்ளையடித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Sept 2021 10:27 PM IST (Updated: 17 Sept 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

தந்தை, மகனை மிரட்டி நகை, பணம் கொள்ளையடித்த 2 பேர் கைது

பேரூர்

தொண்டாமுத்தூர் அருகே வீடு புகுந்து தந்தை, மகனை மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

வீடு புகுந்து தாக்குதல்

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் இக்கரை போளுவாம்பட்டி ஏகனூர் தோட்ட பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). விவசாயி. இவருடைய மனைவி ருக்குமணி. 

இவர்களுடைய மகன்கள் சுபாஷ்குமார் (29), அரிகிருஷ்ணன் (25). இதில், சுபாஷ்குமாருக்கு திரும ணம் ஆகி விட்டது. அவர்கள் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி, சுபாஷ்குமார் அவரது தாயார், மனைவி ஆகியோர் வீட்டின் மேல் மாடியிலும், கீழே தளத்தில் உள்ள அறையில் அரிகிருஷ்ணனும், சுப்பிரமணியனும் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தனர்.

அன்று அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கதவை தட்டும் சத்தம் கேட்டது. உடனே சுப்பிரமணியன் எழுந்து கதவை திறந்தார். 

நகை, பணம் கொள்ளை

அப்போது முகமூடி ஆசாமிகள் 2 பேர் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து சுப்பிரமணியன், அரிகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் கத்தி முனையில் மிரட்டி, வீட்டில் இருந்த ரூ.13 லட்சம், நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனர். 

அவர்களை அரிகிருஷ்ணனும், சுபாஷ்குமாரும் துரத்தி சென்றனர். ஆனாலும் பிடிக்க முடிய வில்லை.

இது குறித்த புகாரின் பேரில் ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வந்த னர். இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

2 பேர் கைது

அவர்கள், கொள்ளை தொடர்பாக சென்னை அருகே பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த முகம்மதுபாரிஸ் (வயது 43), சென்னை அருகே மேலவாக்கத்தை சேர்ந்த சேவியர் அருள் (வயது 45) ஆகிய 2 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

இதில் அவர்கள் 2 பேருக்கும் சேர்ந்து சப்பிரமணியனின் வீட்டில் கொள்ளையடித்தது தெரிய வந்தது. 

இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story