ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு


ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு
x
தினத்தந்தி 17 Sept 2021 10:33 PM IST (Updated: 17 Sept 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மதுரை, செப்.18-
மதுரையை சேர்ந்த ஜானகி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-
டி.என்.பி.எஸ்.சி. சார்பில் அரசு குற்றவியல் வக்கீல்கள் நியமனத்திற்கான தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஆன்லைன் வழியாக விண்ணப்பம் அனுப்புவதற்கு விண்ணப்பதாரரின் ஆதார் எண் கேட்கப்படுகிறது. இந்த ஆதார் எண் கொடுக்காவிட்டால் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது என கூறப்படுகிறது.
ஆனால் போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயமில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதனால் தகுதி இருந்தும் ஆதார் எண் இல்லாதவர்கள் போட்டித் தேர்வு எழுத இயலாது.
எனவே போட்டித் தேர்வர்கள் நலன்கருதி டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்த அறிவிப்பு சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தர விட்டனர். விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story