விபத்தில் அண்ணன்-தம்பி படுகாயம்


விபத்தில் அண்ணன்-தம்பி படுகாயம்
x
தினத்தந்தி 18 Sept 2021 1:03 AM IST (Updated: 18 Sept 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் அருகே கார் மோதிய விபத்தில் அண்ணன்-தம்பி இருவரும் படுகாயம் அடைந்தனர்.

எஸ்.புதூர், 

எஸ்.புதூர் அருகே உள்ள சடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகன்கள் நந்தகுமார் *வயது 22)/ பொன்னையா (23). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டு கிழவயல் கோவிலுக்கு சென்றனர். கரிசல்பட்டி பகுதியில் சென்ற போது எதிரே வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  உள்ளனர்.இதுகுறித்து புழுதிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----


Next Story