லாட்டரி விற்றவர் கைது


லாட்டரி விற்றவர் கைது
x
தினத்தந்தி 18 Sept 2021 3:46 AM IST (Updated: 18 Sept 2021 3:46 AM IST)
t-max-icont-min-icon

லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை, 
மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சோலையழகுபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த செல்வவிநாயகம் (வயது 50) என்பதும், அவர் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், 5 ஆயிரத்து 40 ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story