பூந்தமல்லியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி
பூந்தமல்லியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதியானது.
பூந்தமல்லி,
பூந்தமல்லியில் பள்ளி மாணவர்கள் 4 பேர், கல்லூரி மாணவர்கள் 2 பேர் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பூந்தமல்லியை சேர்ந்த இவர்கள் சென்னீர்குப்பம், திருவேற்காடு, பொன்னேரி பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
இதில் சென்னீர்குப்பத்தில் தனியார் பள்ளியில் படித்து வரும் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும், திருவேற்காட்டில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. பொன்னேரியில் படித்து வரும் ஒரு பள்ளி மாணவர் மற்றும் 2 கல்லூரி மாணவர்கள் என 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தற்போது தொற்று உறுதி என முடிவு வந்துள்ளது. இதையடுத்து இந்த மாணவர்கள் படித்த பள்ளி மற்றும் கல்லூரிகள், அவர்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் சுகாதாரத் துறையினர் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story