காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவில் உண்டியல் வசூல் ரூ.9 லட்சம்


காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவில் உண்டியல் வசூல் ரூ.9 லட்சம்
x
தினத்தந்தி 18 Sept 2021 2:33 PM IST (Updated: 18 Sept 2021 2:33 PM IST)
t-max-icont-min-icon

108 திவ்ய தேசங்களில் புகழ்பெற்ற 4 திவ்ய தேசங்களும் ஒன்றாக இருக்கும் சிறப்பு வாய்ந்த காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் உள்ள 5 உண்டியல்கள் 11 மாதங்களுக்கு பிறகு திறந்து எண்ணப்பட்டது.

இதில் கோவில் செயல் அலுவலர்கள் வெள்ளைச்சாமி, மலைவாசன், பரம்பரை அறங்காவலர் அழகியசிங்கர், கோவில் ஆய்வாளர் பிரித்திகா, மேலாளர் ரகு ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் உதவியுடன் 5 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.9 லட்சத்து 5 ஆயிரத்து 727 செலுத்தி இருந்தனர். 36 கிராம தங்கம், 78 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது.

Next Story