காஞ்சீபுரம் உள்ளாட்சி தேர்தல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் குறைகளை தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களான 044 - 2723 7425 மற்றும் 044- 2723 7690 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.
Related Tags :
Next Story