மீன் விலை வீழ்ச்சி


மீன் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 18 Sept 2021 10:28 PM IST (Updated: 18 Sept 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

மீன் விலை வீழ்ச்சி

கோவை

புரட்டாசி மாதம் தொடங்கியதால் கோவையில் மீன் விலை வீழ்ச்சி அடைந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.500&க்கு விற்பனையானது.

மீன் விலை வீழ்ச்சி

கோவை உக்கடத்தில் இருந்து செல்வபுரம் செல்லும் ரோட்டில் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகை, கன்னியாகுமரி மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. 

இதுதவிர ஆழியாறு, திருமூர்த்தி அணைகள் மீன்களும் கொண்டு வரப்படுகிறது. தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி உள்ளது. இந்த மாதத்தில் மீன் உள்ளிட்ட அசைவ உணவு சாப்பிடுவதை பலர் தவிர்ப்பது வழக்கம். 

தற்போது மீன்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் மீன் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இங்கு கடந்த வாரம் சிறிய வஞ்சிரம் கிலோ ரூ.650&க்கு விற்றது. அது நேற்று 500க்கும், ரூ.1,100க்கு விற்ற பெரிய வஞ்சிரம் நேற்று ரூ.800க்கு விற்றது.

இது குறித்து மீன் வியாபாரி ராமகிருஷ்ணன் கூறியதாவது

எதிர்பார்த்த விற்பனை இல்லை

கொரோனா காரணமாக ஞாயிற்றுக்கிழமை கடைகள் மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சனிக்கிழமையில் மீன் விற்பனை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம்.

 ஆனால் புரட்டாசி மாதம் தொடங்கியதால் மீன் வாங்குவதை பலர் தவிர்த்து உள்ளனர். இதனால் மீன் விலை குறைந்தும் எதிர்பார்த்த விற்பனை இல்லை.

 கடந்த வாரம் ரூ.300&க்கு விற்ற ஊளி ரூ.200க்கும், ரூ.300க்கு விற்ற சங்கரா ரூ.260க்கும், ரூ.350க்கு விற்ற கண் நண்டு ரூ.250க்கும், மத்தி ரூ.200&ல் இருந்து ரூ.150க்கும் விற்றது. 

ரூ.200க்கு விற்ற கிழங்கான் ரூ.120க்கும், ரூ.250க்கு விற்ற நெத்திலி ரூ.200&க்கும், ரூ.400க்கு விற்ற செம்மீன் ரூ.300க்கும், ரூ.250க்கு விற்ற அயிலை ரூ.160&க்கும் விற்பனை செய்யப்பட்டது. அணை மீன்களான கட்லா, நாட்டு விரால், நெய்மீன் ஆகியவற்றின் விலையும் குறைந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story