விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை
விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை
கோவை
விமானத்தை தீவிரவாதிகள் கடத்தினால், பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் மீட்பது எப்படி? என்பது குறித்து கோவை விமான நிலையத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்படி, விமானத்தை கடத்திய தீவிரவாதிகள் பயணிகளுடன் கோவை விமான நிலையத்துக்கு வந்து நிற்கிறார்கள்.
இது பற்றிய தகவல் போலீஸ் கட்டுப்பாட்டு அறை மற்றும் விமானநிலைய தொழில் பாதுகாப்பு படைக்கு கிடைக்கிறது.
உடனே அவர்கள், அதிரடிப்படையுடன் விமானநிலைய வளாகத்தில் குவிந்து துப்பாக்கி முனையில் தீவிரவாதிகளை மடக்கிப்பிடித்து மண்டியிட வைக்கிறார்கள்.
இந்த போராட்டத்தில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்சில் அனுப்புவது, பயணிகளை பாதுகாப்பாக மீட்பது போன்றவற்றையும் தத்ரூபமாக ஒத்திகை நடத்தி காட்டினர். இந்த நிகழ்ச்சியை போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தாமோர், விமானநிலைய இயக்குனர் செந்தில் வளவன் ஆகியோர் கண்காணித்தனர்.
இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகள் கூறும்போது, அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் பாதுகாப்பாகவும், திறமையாகவும் குற்றவாளிகளை மடக்கிப்பிடிப்பது குறித்த ஒத்திகை நல்லபடியாக நடைபெற்றது என்றனர். இந்த ஒத்திகையில் ஏற்பட்ட சில இடர்பாடுகளை களைவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை
Related Tags :
Next Story