‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 19 Sept 2021 2:01 AM IST (Updated: 19 Sept 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939078888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வாருகால் சீரமைக்கப்படுமா?
மதுரை டி.பி.கே. சாலை மேயர் முத்துபாலத்தின் கீழ்பகுதியான பவர் ஹவுஸ் சாலையில் கழிவுநீர் செல்லும் வாருகால் சீரமைக்கப்படாமல் இருக்கிறது. இதனால், மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் தேங்கி நின்று, சுகாதார சீர்கேட்டை உருவாக்குகிறது. மேலும், கொசுத்தொல்லையும் அதிகரிக்கிறது. அந்த பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மக்களின் நலன் கருதி, வாருகாலை சீரமைத்து மழைநீர் சரிவர செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்துல்காதர், ஜெய்ஹிந்த்புரம்.

மணல் திருட்டு 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தையா கோவில் பின்புறம் உள்ள வைகை ஆற்றில் அடிக்கடி மணல் திருட்டு நடைபெறுகிறது. மர்ம நபர்கள் டிராக்டர், மோட்டார்சைக்கிள்களில் அள்ளி செல்கின்றனர். போலீசார் இப்பகுதியில் தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு மணல் திருட்டு நடைபெறால் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பிரித்திகா, பரமக்குடி. 

சுகாதார சீர்கேடு 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆஸ்பத்திரியின் பின்புறம் சிலர் குப்பைகளை அதிக அளவில் கொட்டிச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், சுகாதார சீர்கேடாக காணப்படுகிறது. ஆஸ்பத்திரிக்கு வருபவர்களுக்கு மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
அமீர்ஜான், திருப்பத்தூர். 

பூட்டி கிடக்கும் பூங்கா 
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சிறுவர், சிறுமிகளின் நலன்கருதி பூங்கா ஒன்று கட்டப்பட்டது. ஆனால் இந்த பூங்கா கடந்த சில மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் இங்கு விளையாட வரும் குழந்தைகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். குழந்தைகளின் நலன்கருதி பூட்டி கிடக்கும் இந்த பூங்காவை திறக்க வேண்டும். 
வெற்றி, விருதுநகர். 

தெருவிளக்கு அமைக்கப்படுமா?
மதுரை தோப்பூர் ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லாமல் இருக்கிறது. மேலும், இரவு நேரங்களில் நாய்த்தொல்லையும் அதிகரித்துள்ளது. தெருவிளக்குகள் இல்லாத காரணத்தால் அடிக்கடி குற்றச்சம்பவங்களும் நடக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? 
சித்திரைசெல்வன், தோப்பூர்.

பழுதடைந்த சாலை 
சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 6&வது வார்டுக்கு உட்பட்ட சிந்தாமணி தெரு, தென்றல் நகர், சாந்தி நகர், பிருந்தாவன நகர், கம்யூனிட்டி மஹால், சுந்தரமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. பழுதடைந்த இந்த சாலையில் செல்லும் போது வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அழகு கண்ணன், கானாடுகாத்தான். 

சேறும், சகதியுமான சாலை 
மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி இல்லை. இதன் காரணமாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. நடந்து செல்ல முடியாத நிலையில் சேறும், சகதியுமாக சாலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
முத்து முரளி, மேலஅனுப்பானடி.   

தெருநாய்கள் தொல்லை 
ராமநாதபுரம் நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் நாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். தெருநாய்களின் தொல்லையால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வெளியில் செல்லவே அச்சம் அடைகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கிருஷ்ணன், ராமநாதபுரம்.

வாகன ஓட்டிகள் அவதி 
மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஊராட்சி கீழ் சவுராஷ்டிரா காலனி மீனாட்சி நகர் 1வது காலனி மெயின் ரோடு மிகவும் மோசமடைந்து உள்ளது. குண்டும், குழியுமான இந்த சாலையால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இவ்வழியாக செல்லும் போது வாகனங்களும் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இரவு நேரத்தில் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே விபரீதம் ஏற்படும் முன்பு குண்டும், குழியுமான சாலையை சீரமைப்பார்களா?
சூர்யா, சக்கிமங்கலம்.

1 More update

Next Story