திருமங்கலத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை


திருமங்கலத்தில் தேசிய புலனாய்வு  முகமை அதிகாரிகள் திடீர் சோதனை
x
தினத்தந்தி 19 Sept 2021 2:38 AM IST (Updated: 19 Sept 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரம் தொடர்பாக மதுரை திருமங்கலத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தி, ஆவணங்கள், மடிக்கணினி ஆகியவற்றை கைப்பற்றினார்கள்.

திருமங்கலம், 
இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரம் தொடர்பாக மதுரை திருமங்கலத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தி, ஆவணங்கள், மடிக்கணினி ஆகியவற்றை கைப்பற்றினார்கள்.
23 பேர் கைது
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த 23 பேர், கடல் வழியாக ரகசியமாக தூத்துக்குடி வந்து, பின்னர் மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் பகுதிக்கு வந்து தங்கினர். அவர்களுக்கான ஏற்பாடுகளை காசிவிசுவநாதன் (வயது 30) உள்ளிட்ட 4 இடைத்தரகர்கள் செய்து கொடுத்துள்ளனர். 
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை தொடர்ந்து, 23 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இங்கிருந்து வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி இலங்கையை சேர்ந்தவர்களை அழைத்து வந்து மோசடி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் இதுதொடர்பாக 19 இடங்களில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.
ஆவணங்கள், மடிக்கணினி 
இதில் இடைத்தரகர்களாக செயல்பட்ட காசிவிசுவநாதன், திருமங்கலம் கப்பலூரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளார். எனவே அவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர். தீவிர சோதனையில் இலங்கை நாட்டு பண நோட்டுகள், மடிக்கணினி மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனையின்போது திருமங்கலம் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் சென்று இருந்தனர். 


Next Story