முறையான ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட சேலைகள் பறிமுதல்

காஞ்சீபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதன் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று உத்திரமேரூர் அருகே கட்டியாம்பந்தல் கூட்ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உத்திரமேரூர் நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்றை மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர். அதில் முறையான ஆவணங்கள் இன்றி 29 சேலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்த சேலைகளை பறிமுதல் செய்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story