படப்பை அருகே மின்னல் தாக்கி வாலிபர் பலி


படப்பை அருகே மின்னல் தாக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 19 Sept 2021 6:06 PM IST (Updated: 19 Sept 2021 6:06 PM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே மின்னல் தாக்கி வாலிபர் பலியானார்.

மின்னல் தாக்கியது

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த குன்னவாக்கம் செல்லியம்மன் கோவில் தெரு வை சேர்ந்தவர் வீரராகவன் இவருடைய மகன் ஹரிஹரன் (வயது 24), தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருடைய சகோதரர் அரவிந்தன் (வயது 20), இவர்கள் நேற்று இரவு வீட்டில் இருந்தனர். குன்னவாக்கம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் இடி இடித்து மின்னல் தாக்கியதில் ஹரிஹரன், அரவிந்தன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.உடனடியாக வீட்டில் இருந்த இவருடைய தந்தை மற்றும் உறவினர்கள் இருவரையும் மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

சாவு

அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஹரிஹரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அரவிந்தன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஹரிஹரன் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்னல் தாக்கி வாலிபர் இறந்த சம்பவம் குன்னவாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story