சித்திரைச்சாவடி தடுப்பணையில் குளித்த இளம்பெண் தண்ணீரில் மூழ்கி பலி


சித்திரைச்சாவடி தடுப்பணையில் குளித்த இளம்பெண் தண்ணீரில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 19 Sept 2021 11:07 PM IST (Updated: 19 Sept 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

தொண்டாமுத்தூர் அருகே உள்ள சித்திரைச்சாவடி தடுப்பணையில் குளித்த இளம்பெண் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

பேரூர்

தொண்டாமுத்தூர் அருகே உள்ள சித்திரைச்சாவடி தடுப்பணையில் குளித்த இளம்பெண் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குளிக்க சென்றனர் 

கோவை சங்கனூர், சண்முக நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 28). இவர் தனியார் நிறுவனத்தில் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 20).

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் செல்கிறது. இதனால் ராஜேஷ் தனது மனைவி சரஸ்வதி மற்றும் நண்பர்களுடன் தொண்டாமுத்தூர் அருகே உள்ள நொய்யல் ஆற்றில் இருக்கும் சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு குளிக்க சென்றனர். 

தடுப்பணையில் மூழ்கி பலி 

பின்னர் அவர்கள் தெனமநல்லூர் ரோட்டில் உள்ள நொய்யல் ஆற்றில் சித்திரைச்சாவடி தடுப்பணையின் பின்பகுதியில் இறங்கி குளித்தனர். அப்போது சரஸ்வதி ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. 

இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் மற்றும் அங்கு குளித்துக்கொண்டு இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. 

இதன் காரணமாக சரஸ்வதி தண்ணீரில் மூழ்கி பலியானார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் அங்கு வந்து பலமணி நேரம் போராடி சரஸ்வதி உடலை மீட்டனர். 

பின்னர் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Next Story