மாயமான பள்ளி மாணவன், படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்பு


மாயமான பள்ளி மாணவன், படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்பு
x
தினத்தந்தி 20 Sept 2021 2:23 PM IST (Updated: 20 Sept 2021 2:23 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மதுரவாயல் சீமாத்தம்மன் நகரைச் சேர்ந்த 9 வயது மாணவன், ஆலப்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இவன், குடும்ப வறுமை காரணமாக ஆலப்பாக்கத்தில் உள்ள தியேட்டர் முன்பு மாலையில் சுண்டல் வியாபாரம் செய்து வந்தான்.

நேற்று முன்தினம் இரவு சுண்டல் வியாபாரத்துக்கு சென்ற மாணவன், பின்னர் மாயமாகிவிட்டான். எங்கு தேடியும் அவனை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர், மதுரவாயல் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் தலைமையிலான போலீசார், மாயமான மாணவனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் மாயமான மாணவன், மதுரவாயல் மேம்பாலத்தின் கீழ் தலை மற்றும் மூக்கில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தான். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த மாணவனை, மதுரவாயல் போலீசார் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த பகுதியில் கஞ்சா போதையில் இருந்த 17 வயது சிறுவன், மாணவனை மேம்பாலத்தின் கீழ் அழைத்துச்சென்று ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததும், அதற்கு மாணவன் மறுத்ததால் ஆத்திரத்தில் அவனை கல்லால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச்சென்றதும் தெரிந்தது. இதையடுத்து 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story